full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் 2015 ஜனவரி 2

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் 2015 ஜனவரி 2

2015-ம் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று 02-01-2015-ல் 3 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.

1.  விஷயம் வெளியே தெரியக் கூடாது 

vishyam-veliyae-theriyakoodathu-movie-stills

Open Eye Theaatres நிறுவனத்தின் சார்பில் வி.கணேசன் தயாரித்திருக்கிறார். செண்ட்ராயன், ஆர்யன், ‘மூடர் கூடம்’, குபேரன், ‘நாடோடிகள்’ நங்கன், அம்பா சங்கர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  அமிதா முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையும் அமைத்து இயக்குபவர் ஏ.ராகவேந்திரா, ஒளிப்பதிவு – ஒளிக்குட்டி, கலை – ஏழுமலை, படத் தொகுப்பு – வில்சி, பாடல்கள் கெ.அருணாசலம், நடனம் – சங்கர், ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா, இணைத் தயாரிப்பு – கே.அருணாசலம், எஸ்.செந்தில் பாபு, எஸ்.தினேஷ்பாபு, நிர்வாகத் தயாரிப்பு – ஜி.அசோக்குமார்,

2. விருதாலம்பட்டு

DSC_0112 copy

தமிழ்த்தாய் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாசலபதி தயாரித்திருக்கின்றனர். வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ராம்ஜி இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் – ஜிபின்.பி.எஸ்., நடனம் – ஜான்பாபு, ஜாய்மதி., இணை தயாரிப்பு – தண்டபாணி., பாடல்களை எழுதி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.ஜெயகாந்தன்.

கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லை சிவா, மணிமாறன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

3. திரு வி.க. பூங்கா

Thiru-Vi-Ka-Poonga-poster

புதுமுகங்களே ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். காதல் தண்டபாணி மற்றும் பெயர் தெரிந்த சிலரும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு இரா.கொளஞ்சிகுமார். பிரவீண்மிர்ரா இசையமைத்திருக்கிறார். தாமரை, தமிழிசை செளந்தர்ராஜன் பாடல்களை எழுதியிருக்கின்றனர். அறிமுக இயக்குநரான செந்தில் செல்.எம்.  எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை கடல் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

4. TH HOBBIT – வேதாளக் கோட்டை – ஆங்கில டப்பிங் படம்

Our Score