ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கியிருக்கும் ‘யட்சன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தை யு டிவி விஷ்ணுவர்த்தன் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி, கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர்களான இரட்டையர்கள் சுபாவும், விஷ்ணுவர்த்தனும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள். இசை – யுவன்சங்கர்ராஜா, ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ். எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத் கலை – லால்குடி இளையராஜா, எழுத்து, இயக்கம் – விஷ்ணுவர்த்தன்.
கதை பற்றி இயக்குநர் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூறும்போது, ”இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும்..” என்றார்.
“இந்த மாதம் முழுவதிலும் பல பெரிய படங்கள் ரிலீஸாகப் போவதால் சற்று தள்ளிப் போய் செப்டம்பர் 11-ம் தேதியன்று தனிக்காட்டு ராஜாவாக களமிறங்கப் போகிறான் இந்த யட்சன்..” என்று தைரியமாகச் சொல்கிறார் யு டிவியின் தென்னகப் பிரிவின் தலைமை செயல் அலுவலரான தனஞ்செயன்.