நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் ‘யாக்கை’ படம் மிக வித்தியாசமான கதைக்களனில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் கிருஷ்ணாவின் கேரக்டர் நெகட்டிவ் கேரக்டராம். நடிகை ஸ்வாதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் படத்தில் ஒரு முக்கியமான போலீஸ் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குழந்தை வேலப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘ஆண்மை தவறேல்’ என்ற படத்தை இயக்கியவர்.
முதலில் இந்தப் படத்திற்கு ‘இதயம்’ என்ற தலைப்புதான் வைக்கப்பட்டதாம். பின்னர் அதை மாற்றி ‘யாக்கை’ என்று வைத்திருக்கின்றனர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் குழந்தை வேலப்பன், “என் முந்தைய படமான ஆண்மை தவறேல் ஆள் கடத்தலை பி்ன்னணியாகக் கொண்ட படம். ஆத்மாவை பிணைத்து இருப்பதற்கு ‘யாக்கை’ என்று பொருள். தலைப்புக்கு ஏற்றாற்போல் உணர்வுப்பூர்வமான திகில் படம் இது. சுவாரஸ்யமான முடிச்சுக்களின் இறுதியில், ஒரு சமூக பிரச்சினையையும் வைத்திருக்கிறோம். படத்தின் காட்சிகள் யதார்த்தமும், கற்பனையும் சேர்ந்த கலவையாக இருக்கும்..” என்கிறார்.