பொங்கல் தினத்தில் ரிலீஸாகிறது ‘டார்லிங்’ திரைப்படம்..

பொங்கல் தினத்தில் ரிலீஸாகிறது ‘டார்லிங்’ திரைப்படம்..

திடீரென்று பொங்கல் ரிலீஸ் படங்களில் போட்டிக்கு குதித்திருக்கிறது ‘டார்லிங்’ திரைப்படம்.

‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிப் போனதால் ஏற்பட்ட இடைவெளியை கைப்பற்ற பல திரைப்படங்கள் முயன்று வந்தன. ஒத்தி வைக்கப்பட்ட ‘காக்கி சட்டை’ படத்தினை மீண்டும் பொங்கலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வந்தன.

ஆனால் இந்த இடைவெளியில் ‘டார்லிங்’ படம் முந்திக் கொண்டுவிட்டது. ‘டார்லிங்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருப்பதாக சற்று நேரத்திற்கு முன் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது டிவீ்ட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமாரும், நிக்கி கல்ராணியும் நடித்திருக்கும் இந்தப் படத்தை சான் ஆண்டன் இயக்கியிருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும், கிரீன் ஸ்டூடியோ ஞானவேல்ராஜாவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த், எடிட்டிங் ரூபன், இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ்குமார்.

இந்தப் படத்தை 4 முக்கிய தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய டிரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது..!

இந்தப் படம் 2013-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேமகதா சரித்திரம்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score