full screen background image

சமுத்திரக்கனி, ரித்விகா நடித்த ‘யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29-ல் வெளியாகிறது!

சமுத்திரக்கனி, ரித்விகா நடித்த ‘யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29-ல் வெளியாகிறது!

11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி  மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது!

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப் படங்களை  தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக். இவர் தற்போது  N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு, ‘நான் கடவுள்’  ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – N.A.ராஜேந்திர சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு – ஜெய்ஸ், இசை – N.R. ரகுநந்தன், படத் தொகுப்பு – ராமாராவ், கலை இயக்கம் – சிவா யோகா, சண்டை இயக்கம் – வெற்றி வீரா, பாடல்கள் – பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை, பாடகர்கள் – G.V.பிரகாஷ்குமார், N.R.ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார், பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன் – எம்.பி.ஆனந்த், டிசைன்ஸ் – N – Talkies, குமரன்.கே, தயாரிப்பு – டாக்டர். பிரபு திலக், கி. ஆனந் ஜோசப் ராஜ்.

இந்தப் படம் குறித்து டாக்டர்.பிரபு திலக் பேசும்போது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹைப்பர் லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி  திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்..” என்றார்.

Our Score