வித்தியாசமான தலைப்புகள் வைத்தால்தான் இனிமேல் வேலைக்கு ஆகும் என்பதை புரிந்து கொண்ட இன்றைய இளம் இயக்குநர்கள், ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று ரசிகர்களே யோசிக்கும் அளவுக்கு டைட்டில்களை தேடிப் பிடிக்கிறார்கள்.
அப்படியொரு தலைப்புதான் வரக் கூடிய படமான ‘யானை மேல் குதிரை சவாரி’.
இயக்குநர் கே.பாக்யராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கருப்பையா முருகன் என்பவர் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ‘லொள்ளுசபா’ சுவாமிநாதன், அர்ச்சனா சிங், முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், பப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மோகன், எடிட்டிங் – கணேஷ்குமார், நடனம் – பாபி ஆண்டனி, இசை-பாடல்கள் – இமாலயன், பின்னணி இசை – தாஜ்நூர்.
முயற்சி பண்ணாமலேயே முடியாதுன்னு முடிவு செய்வதுதான் உலகத்திலேயே நம்பர் ஒன் முட்டாள்தனம்ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு குழு, தங்களால் நிச்சயம் முடியாத ஒரு விஷயத்தை செய்து முடிக்க முயற்சி செய்வதுதான் இந்தப் படத்தின் கதை. இது முற்றிலும் நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படம்.
சென்னை, அரக்கோணம், திருச்சி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.











