‘யாமிருக்க பயமே’ கன்னடத்தில் ரீமேக்காகிறது..!

‘யாமிருக்க பயமே’ கன்னடத்தில் ரீமேக்காகிறது..!

'விண்ணைத் தாண்டி வருவாயா', 'கோ', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'நீதானே என் பொன்வசந்தம்', 'யாமிருக்க பயமே', 'யான்' ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் அடுத்து கன்னடத்தில் புதிய படத்தைத் தயாரிக்கிறது..

இந்தாண்டு 'யான்' படத்திற்கு முன்பாக 'யாமிருக்க பயமே' என்ற படத்தையும் தமிழில்  தயாரித்திருந்தது ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்.

இதில் ‘கழுகு’ கிருஷ்ணா, ஆதவ் கண்ணதாசன், கருணாகரன், ரூபா மஞ்சரி, அனஸ்வரா, ஓவியா, பாலாஜி மோகன், போஸ் வெங்கட், தேவிபிரியா, சோனா, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருந்த இந்தப் படத்தை 'டிகே' என்னும் கார்த்திகேயன் இயக்கியிருந்தார். படமும் அமோகமாக வெற்றி பெற்றது.

இப்போது இந்த 'யாமிருக்க பயமே' படத்தை இதே நிறுவனமே, கன்னடத்தில் ரீமேக் செய்யவிருக்கிறதாம்..  கன்னடத்தில் 'நமோ பூத ஆத்மா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனனும்,  ரூபா மஞ்சரியும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்கள். மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..!