full screen background image

“ஐ’ படத்தின் ரிஸ்க்கான உடல் மெலிதல் ஐடியா விக்ரமுடையதுதான்..!”- இயக்குநர் ஷங்கர் விளக்கம்..!

“ஐ’ படத்தின் ரிஸ்க்கான உடல் மெலிதல் ஐடியா விக்ரமுடையதுதான்..!”- இயக்குநர் ஷங்கர் விளக்கம்..!

‘ஐ’ படத்திற்காக விக்ரம் எடுத்திருக்கும் மிக ரிஸ்க்கான உடல் எடை குறைப்பு முயற்சிகளை விமர்சிக்காதவர்களே இல்லை எனலாம்.

இந்த ‘ஐ’ படத்தின் ஒரு கேரக்டருக்காக எய்ட் பேக் உடலமைப்போடு இருக்கும் விக்ரம்.. இன்னொரு நேரத்தில் மிக மெல்லிய தேகத்தோடு வருவதற்காக மாதக்கணக்கில் பட்டினி கிடந்து, மெலிந்து எலும்பும், தோளுமாகவும் தன்னை உருமாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.

I-vikram-bodybuilder

இந்த உடல் எடை மாற்றும் நேரத்தில் விக்ரம் படும் கஷ்டங்களை பார்த்து அவர் குடும்பத்தினர் வருத்தப்படுவதாகவும், இயக்குநர் ஷங்கரை அவர்கள் திட்டியதாகவும், ஷங்கரிடம் விக்ரமின் அப்பா நேரில் சென்று ‘ஏன் இந்த விளையாட்டு?’ என்று விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

i-vikram-slim-body

‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட சூப்பர் ஸ்டார் ரஜினி இதைக் குறிப்பிட்டு ‘விக்ரமின் அர்ப்பணிப்போடு கூடிய நடிப்பை பாராட்டுகிறேன்’ என்றார்.

ஆனால் இன்றைய ‘குமுத’த்திற்கு இயக்குநர் ஷங்கர் அளித்திருக்கும் பேட்டியில் அந்த “உடல் மெலிதல் என்ற ஐடியாவை சொன்னதே விக்ரம்தான்” என்று சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் தன் பேட்டியில், “இது ஒரு பாடி பில்டர் மாதிரியான போர்ஷன். ‘இதுக்கு ஆக்சன் கலந்த நடிப்பு மட்டும் போதும்’ என்றுதான் விக்ரமிடம் கூறினேன். ‘இந்த கேரக்டருக்காக உடலை இளைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்’னு சொன்னார் விக்ரம். யோசித்துப் பார்த்தபோது அவர் சொல்வது அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்றுவது போல இருந்தது.

‘பார்த்துச் செய்யுங்க.. உங்க ஹெல்த்துதான் முக்கியம்’ என்று அவரிடம் சொன்னதோடு, அவருடைய மனைவிக்கு போன் செய்து ‘கென்னியை உடல் இளைக்கும்படி நான் சொல்லவில்லை.. அவரேதான் பண்றார். அவரை பார்த்துக்குங்க..’ என்றேன். ‘ஆமா.. அவர் அந்த கேரக்டர்ல இன்வால்வ்மெண்ட் எடுத்திட்டு, சந்தோஷமாத்தான் செய்றார்..’ என்று அவங்களும் சிரிக்கிறாங்க.

ஆக.. கணவரின் முயற்சிக்கு மனைவியும் துணையாயிருப்பதை பார்த்தேன். ‘ஐ’ விக்ரம்.. இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுவார்…” என்கிறார் ஷங்கர்.

இத்தனை உழைப்புக்கும் பாராட்டு கிடைக்காமலா போகும்..?

Our Score