full screen background image

“இணையத்தில் கதை எழுதுபவர்களின் கற்பனையை மெச்சுகிறேன்..”-இயக்குநர் ஷங்கர் பாராட்டுகிறார்..!

“இணையத்தில் கதை எழுதுபவர்களின் கற்பனையை மெச்சுகிறேன்..”-இயக்குநர் ஷங்கர் பாராட்டுகிறார்..!

‘ஐ’ படத்தின் கதை இதுதான் என்று ஆளாளுக்கு இணையங்களில் அடித்துவிட்டுக் கொண்டிருக்க.. ‘உண்மையான கதை இதுதான்’ என்று சொல்லும் உரிமையுள்ள இயக்குநர் ஷங்கரோ, இதையெல்லாம் பார்த்து, படித்து, ரசித்தபடியே இருக்கிறாராம்..!

இன்றைய ‘குமுத’த்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நெட்ல வந்த கதையையெல்லாம் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..? அவங்க கற்பனை வளத்தை மெச்சலாம். பெரிய படங்களுக்கு இது போல வர்றது சகஜம்தான்.. அதைத் தாண்டி வேற கதை இருக்கும். படத்தின் உண்மையான கதையென்ன என்பது ‘ஐ’ ரிலீஸ் தினத்தில் தெரிந்துவிடும். அதுவரை அவங்க கதை விடட்டும்.. நாம் அதைப் படித்து ரசிப்போம்..” என்று ஜோவியலாக பதில் சொல்லியிருக்கிறார்.

படம் பற்றி அவர் மேலும் சொல்கையில், “இந்தப் படத்தோட முதுகெலும்பே கதைதான்.. புது மாதிரியான ஜானர்ல திரைக்கதை சொல்லியிருக்கேன்… இதுல சோஷியல் மெஸேஜ், லவ், ஆக்சன், காமெடி எல்லாம் இருக்கு. இதுல ஸ்பெஷ்ன்னா அது மேக்கப்தான்..” என்கிறார் ஷங்கர்.

Our Score