நடிகர் ஆதி நடித்திருக்கும் ‘யாகவராயினும் நா காக்க’ திரைப்படம், வரும் மே மாதம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை நடிகர் ஆதியின் சகோதரர் சத்ய பிரபாஸ் பினிசெட்டி இயக்கியிருக்கிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்திருக்கிறார்.
படத்தின் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் மிதுன் சக்கரவர்த்தி நடித்திருக்கிறார். மேலும் பசுபதி, ரிச்சா பலோட், நாசர், ராமராஜூ, ஷ்ரவன், ஹரிஷ் உத்தமன், பிரகதி, பிதாமகன் மகாதேவன், கிட்டி, ஆடுகளம் நரேன், லட்சுமி பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய.. பிரசான் பிரவின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். வி.ஜெ.சாபு ஜோஸப் படத்தொகுப்பு பணியினை செய்திருக்கிறார்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் முன்னணியில் இருக்கும் குளோபல் யுனைட்டெட் மீடியா நிறுவனத்தின் சார்பில் பிரேம்மேன்ன் இந்தப் படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தியேட்டர் உரிமையைப் பெற்று படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.
இவர் ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தை கேரளாவில் விநியோகம் செய்தவர். வரவிருக்கும் ராஜமெளலியின் ‘பாகுபாலி’ படத்தையும் இவர்தான் கேரளாவில் ரிலீஸ் செய்யப் போகிறார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாம். இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான வகையில் அவர்கள் விரும்பும் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறதாம்..!











