‘அண்ணாத்த’ படத்தின் கதைதான் என்ன..?

‘அண்ணாத்த’ படத்தின் கதைதான் என்ன..?

நயன்தாரா இருக்கிறார். மீனா இருக்கிறார். குஷ்பூ இருக்கிறார். இவர்களுடன் கீர்த்தி சுரேஷூம் இருக்கிறார். முதல் மூன்று பேர் ரஜினிக்கு ஜோடியா..? அல்லது அண்ணன், தங்கைகளா..? கீர்த்தி சுரேஷ் யார்..? அப்படி என்னதான் கதை இருக்கு இந்த ‘அண்ணாத்த’ படத்தில் என்று அனைவருமே சந்தேகக் கண்ணோட்டத்துடன் கேட்கிறார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியின்படி இந்தப் படம் ‘முள்ளும் மலரும்’ படத்தின் 2021 வெர்ஷன் என்பதாகவே தோன்றுகிறது.

அந்தக் கதையின்படி இப்படம் அண்ணன்-தங்கை பாசம் கொண்டதாக இருக்கிறது. தங்கையின் மீது அதீத பாசம் கொண்டவராக இருக்கிறார் ‘அண்ணாத்த’. அந்தத் தங்கை தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் காதலனுடன் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுப் போகிறார்.

இதனால் ஏற்படும் குடும்ப உறவுச் சிக்கல்களை அண்ணாத்த எப்படி தீர்த்து வைத்து தனது பாசமலர் தங்கையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த ‘அண்ணாத்த’ படத்தின் கதையாம்.

இயக்குநர் சிவாவின் முந்தைய படமான ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்குக் காரணமே அதில் இருந்த அப்பா-மகள் பாசக் கதைதான். இதிலும் அதேபோல் அண்ணன்-தங்கை பாசமலர் கதையை இயக்குநர் சிவா உருக்கியிருக்கிறார் என்கிறார்.

இந்தப் படத்தில் இமான் இசையில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒரு பாடலும் பிரமாதமாக வந்திருக்கிறதாம். நிச்சயமாக இதற்கு விருது உறுதி என்கிறார்கள் பாடலைக் கேட்டவர்கள்.

சரி.. பாட்டையாவது சீக்கிரமா கொடுங்கய்யா.. கேட்போம்..!!!

Our Score