“மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு..?” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி..!

“மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு..?” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி..!

“மாஸ்டர்’ படத்தின் வசூல் நிலவரம் தமிழ்ச் சினிமாவில் யாருக்காவது தெரியுமா..?” என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சில்லு வண்டுகள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் பேசும்போது, “கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமா…? தியேட்டர்காரர்கள்  சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

மேலும், இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய முடியும். ஒரே சர்வரை வைத்து டிக்கெட் விற்பனையை மானிட்டரிங் செய்ய முடியும். எது நல்ல திரைப்படம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க முடியும். திரையுலகின் வளர்ச்சிக்காக அரசாங்கம் டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வர வேண்டும். தயாரிப்பாளரை காப்பாற்றும் சினிமாதான் நல்ல சினிமா..” என்றார்.

Our Score