வில்லனாக நடிக்கப் போகும் விஷால்..!

வில்லனாக நடிக்கப் போகும் விஷால்..!

‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து விஜய்யைவிடவும் பெரிய பெயரைப் பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் டிவிட்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் அஜீத் ரசிகர்களிடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி பல படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எதற்காக வில்லனாக நடித்தார் என்ற கேள்விக்கு திரையுலகத்திலேயே பலருக்கும் உண்மை தெரியும்.

விஜய் சேதுபதியின் முந்தைய படத் தயாரிப்புகளால் அவர் பட்டிருக்கும் கடன் சுமையைக் குறைக்கும் பொருட்டே அவர் வந்த படங்களையெல்லாம் கேரக்டர் பார்க்காமல் தற்போது ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார். இதனாலேயே மிக சீக்கிரமாகவே அவர் கடன் இல்லாத விஜய் சேதுபதியாக மாறிவிடுவார் என்கிறார்கள்.

இப்போது இதே பார்முலாவை தானும் பின்பற்றினால் என்ன என்று யோசிக்கிறாராம் நடிகர் விஷால். விஷாலுக்கும் பல கோடிகள் கடன் உண்டு. இந்தக் கடன் பிரச்சினையாலையே தான் நடித்த ‘சக்ரா’ படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

இதனால் வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.. பணம் கிடைத்தால் போதும் நடிக்கலாம் என்னும் முடிவுக்கு விஷாலும் வந்துவிட்டாராம்.

இதன் முதல்படியாக ‘இரும்புத் திரை’ படத்தின் ஹிந்தி வெர்ஷனில் விஷாலே வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி.  இந்த ‘இரும்புத் திரை’ படம்தான் விஷாலின் நடிப்பு கேரியரில் அவருடைய சம்பளத்தை மிகப் பெரிதாக உயர்த்திக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியில் இந்தப் படம் மூலமாக வில்லனாகக்கூட அறிமுகமானால் அது தனது பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவுமே…” என்று விஷால் எண்ணுகிறாராம்.

நல்லதே நடக்கட்டும்..!

Our Score