விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோரின் கூட்டணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லிகர்’.
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
படத்தில் இவர் ‘அயர்ன் மைக்’ என்ற வேடத்தில் நடிக்கிறார். தீவிரமான ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் இவரது வரவு இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என் பன்மொழி படமாக இந்த படம் உருவாகிறது.
இது குறித்து விஜய் தேவரகொண்டா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்தியத் திரையுலகில் முதன்முறையாக, ‘லிகர்’ படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி மிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள்.. லெஜண்ட்.. பீஸ்ட்.. காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன் மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.
இன்னும் சில நாட்களுக்கு உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்து கொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்…” என பதிவிட்டுள்ளார்.