“சின்னத்தம்பி-2′ படம் மீண்டும் உருவாகுமா..?” – குஷ்பூவின் பதில்

“சின்னத்தம்பி-2′ படம் மீண்டும் உருவாகுமா..?” – குஷ்பூவின் பதில்

இந்த மாதத் துவக்கத்தில் தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி, தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் நடிகை குஷ்பூ.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாக குஷ்பூ போலவே தனது அடையாளமாகவே இருந்த உடல் பருமனைக் குறைத்து சிக்கென்று அழகாகி குஷ்பூவுக்கே போட்டியாகிவிட்டார் நடிகர் பிரபு.

இப்படி இவர்கள் இருவருமே போட்டி போட்டிக் கொண்டு உடல் எடையைக் குறைத்துக் கொண்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்பியதைக் கண்டு பத்திரிகையாளர்களும் கொஞ்சம் ஷாக்காகித்தான் போனார்கள்.

ஏனெனில் பிரபு எப்போதும் தன்னுடைய புகைப்படங்களை தானே வெளியிட மாட்டார். ஆனால் இளைத்த காளையாக இருக்கும் தனது புதிய போட்டோவை அவரே வெளியிட்டதைப் பார்த்து ஒருவேளை.. இது குஷ்பூவின் போட்டோவுக்கு பதிலடியாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கிறது.

இருந்தாலும் இப்படி இவர்கள் இருவருமே மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் ரேன்ச்சுக்கு மல்லுக் கட்டி நிற்பதால் இவர்களது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சின்னத்தம்பி’ படத்தின் அடுத்தப் பாகத்தை ஆரம்பிக்கலாமே என்று ரசிகர்களும் நினைத்த ஆரம்பித்துவிட்டனர்.

1991-ம் வரும் வெளியான தமிழ்ச் சினிமாவில் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துவிட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை இதற்கான பதிலாக அளித்துள்ளார். 

உண்மையில் ‘சின்னத் தம்பி-2’ படத்தை இப்பொழுது எடுத்தால் நிச்சயமாக ஜெயிக்கும் என்பதே தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

 
Our Score