“வெப் சீரீஸை பார்த்துவிட்டு பேசுங்கள்” – ‘தி பேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் கோரிக்கை

“வெப் சீரீஸை பார்த்துவிட்டு பேசுங்கள்” – ‘தி பேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் கோரிக்கை

“வெப் சீரிஸை பார்த்துவிட்டு கருத்து சொல்லும்படி” தி பேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘அமேஸான் பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் வரும் 28-ம் தேதியன்று ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் நடிகை சமந்தா பெண் விடுதலைப் புலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அவர் மனித வெடிகுண்டாக மாறி, சென்னையில் ஒரு இந்தியத் தலைவரை படுகொலை செய்ய வருவதாகவும் கதை அமைத்திருப்பதாக டிரெயிலரில் தோன்றியது.

இதையடுத்து இந்தத் தொடர் ஈழ விடுதலைக்காகப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதால் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று சீமான், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டித்தனர். தமிழக அரசும் மத்திய அரசிடம் இந்தத் தொடரை தடை செய்யும்படி கேட்டுக் கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் இந்தத் தொடரின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இருவரும் இத்தொடர் பற்றி விளக்கமளித்துள்ளார்.

அவர்கள் இது குறித்து அளித்த விளக்கத்தில், “டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் அடிப்படையில் யூகமான கருத்துகள் எழுந்துள்ளன. இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் தமிழர்கள். தமிழ் மக்களையும் தமிழ் கலாசாரத்தையும் நன்கு அறிவோம்.

தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்துள்ளோம். அனைவரும் தொடர் வெளியாவதுவரை பொறுத்திருந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடரை பார்த்த பிறகு நீங்கள் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்..” என்று கூறியுள்ளனர்.

Our Score