full screen background image

சாதனை படைக்கக் காத்திருக்கும் ‘வாகா’ திரைப்படம்

சாதனை படைக்கக் காத்திருக்கும் ‘வாகா’ திரைப்படம்

“விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வாகா’ திரைப்படம் நிச்சயம் பெரும் வெற்றியை ஈட்டும்..” என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பாராட்டியுள்ளனர்.

விஜயபார்கவி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எம்.பாலவிஸ்வநாதன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாகா’.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கிறார். புதுமுகமான  ரன்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் கருணாஸ், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.சதீஷ்குமார், இசை – டி.இமான், படத் தொகுப்பு – ஏ.எம்.ராஜா முகமது, சண்டை பயிற்சி –  கனல் கண்ணன்,  நடனம் – பாபா பாஸ்கர், கலை – லால்குடி இளையராஜா, வசனம் – கைஸர் ஆனந்த், தயாரிப்பு – எம்.பாலவிஸ்வநாதன், கதை, திரைக்கதை, இயக்கம் – ஜி.என்.ஆர்.குமரவேலன்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு, செயலாளர் டி.சிவா, துணைத் தலைவரான பி.எல்.தேனப்பன் மூவரும் இன்று ‘வாகா’ திரைப்படத்தை பார்த்தனர்.

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் கதையாக உருவாகியிருக்கிறது. ஒரு இந்தியனுக்கும், பாகிஸ்தானிய பெண்ணுக்குமான காதலும், அது தொடர்பான மோதலும்தான் படத்தின் கதை.

சர்ச்சைக்குரிய, ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் காஷ்மீர் எல்லைப் பகுதியில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு, படத்தை உருவாக்கிய கலைஞர்கள் அனைவரையுமே பாராட்டியுள்ளார்.

“விக்ரம் பிரபுவின் நடிப்பு இந்தப் படத்தில் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும்..” என்று பாராட்டினார் தாணு.

“இந்தப் படம் பல சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி. படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ரசித்துப் பார்த்தேன். படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்..” என்றார் சங்கத்தின் செயலாளரான டி.சிவா.

“விக்ரம் பிரபுவின் நடிப்பு இந்தப் படத்தில் புதிய எல்லையைத் தொட்டுள்ளது. இந்தப் படம் அவருடைய நடிப்பு கேரியரில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்..” என்றார் துணைத் தலைவரான பி.எல்.தேனப்பன்.

தனது முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ மூலமாக தமிழ்த் திரையுலகில் முக்கிய இயக்குநருக்கான இடத்தைப் பிடித்திருக்கும் குமரவேலனின் இந்த ‘வாகா’ திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Our Score