இசையமைப்பாளா் டி,இமானை அவரது முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டு மீண்டும் கேலி, கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளரான டி.இமானுக்கு, மோனிகா ரிச்சர்டு என்பவருடன் திருமணமாகியிருந்தது. 12 ஆண்டுகள் கழித்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவகாரத்து செய்து பிரிந்தார் இமான்.
இந்நிலையில் அடுத்த 4 மாதங்களிலேயே மறைந்த பிரபல ஓவியரும், டிசைனருமான உபால்டின் மகள் எமலி உபால்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் டி இமான். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதை அறிவித்த டி.இமான் தனது இரண்டாவது திருமண போட்டோக்களையும் அந்தப் பதிவோடு இணைத்து ஷேர் செய்திருந்தார்.
இமானின் இந்த இரண்டாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த அவரது முன்னாள் மனைவியான மோனிகா, “12 வருடங்களாக உன்னையே நினைத்து உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக ரீப்ளேஸ் செய்துவிட்டீர்கள். குழந்தைகளுக்கும் ரீப்ளேஸ்மெண்ட் செய்துவிட்டீர்கள். உங்களுக்காகவே வாழ்ந்த நான் ஒரு முட்டாள்…” என காட்டமாக கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மோனிகா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இமான் தனது திருமணத்தை அறிவித்ததை போன்றே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது புதிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவலை ஷேர் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மே 20-ம் தேதியான இன்று இரண்டு Dalmatians நாய்களை வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு தூணாக இருந்த எனது அப்பாவுக்கு எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட வேதனைக்கு இந்த செல்லப் பிராணிகள்தான் மருந்து. கடவுள் மற்றும் என் பெற்றோரிடமிருந்து எனக்கு கிடைத்த ஆசிர்வதிக்கப்பட்ட பரிசு.
இந்த செல்ல பிராணிகளான லியா மற்றும் மியா எனக்கு கிடைக்க துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் என் நலம் விருப்பிகளுக்கும் நன்றி. இந்த நாய்கள் இனி மேல் என் 3-வது மற்றும் 4-வது மகள்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு அம்மாவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இதுவரையிலும் வாழ்க்கையில் உண்மையான அன்பையும், சந்தோஷத்தையும் பெறாத எனக்கும் எனது மகள்களுக்கும் இது உண்மையிலேயே சந்தோஷத்தை தரும். எங்களின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும்…” என்று என்று குறிப்பிட்டுள்ளார் மோனிகா.
மோனிகாவின் இந்தக் கிண்டலான இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.