full screen background image

“நிஜத்திலும் நான் ‘லவ் டாக்டர்’தான்..” – சொல்கிறார் நடிகர் VTV கணேஷ்

“நிஜத்திலும் நான் ‘லவ் டாக்டர்’தான்..” – சொல்கிறார் நடிகர் VTV கணேஷ்

தமிழ் திரையுலகில் பல்வேறு புகழ் பெற்ற நடிகர்கள் தங்களது குரல் வன்மையால் பெரும்பெயர் ஈன்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் VTV கணேஷ்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘வானம்’, ‘ஒஸ்தி’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘போடா போடி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் கணேஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘கப்பல்’.

“கப்பல்’ படம் ஃப்ரெண்ட்ஷிப்-லவ்னு ஜாலியான, யூத்தான ஒரு படம். நான்தான் காதலை சேர்த்து வைக்கும் தேவதையாக வருகிறேன். வைபவின் காதல் ஜெயிக்க படத்துல ஹெல்ப் பண்றேன். நான் ‘கார்குரல் கண்ணன்’தான். படத்தில் மட்டும் இல்லை.. நிஜ வாழ்க்கையிலும் ஒரு லவ் டாக்டராகத்தான் என்னை பார்க்கிறார்கள். சில காதலர்கள் என்னைத் தேடி வந்து அவங்க அப்பா அம்மாகிட்ட அவங்களுக்காக பேசி சேர்த்து வைக்க சொல்றாங்க…” என்று சொல்லி சிரிக்கிறார்..

“இந்த ‘கப்பல்’ படம் எனக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் கிடைத்த புகழை மீண்டும் தரும். ‘I’ஸ்டுடியோஸ் தயாரித்த படத்தை ’S’ பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. ‘I’ ஃபார் இன்ட்ரெஸ்டிங், ‘S’ ஃபார் சூப்பர். இந்த இரண்டு வார்த்தையும் ஒரு ‘கப்பல்’ அளவுக்கு கிடைக்கும்ன்னு நம்புறேன்..” என்கிறார் VTV கணேஷ்.

Our Score