full screen background image

கதையைகூட கேட்காமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்..!

கதையைகூட கேட்காமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்..!

கிருஷ்ணா – விதார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்   ‘விழித்திரு’. 

‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் இயக்குநர் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருக்கின்றனர்.

விஜய் மில்டன், ஆர்.வி,சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ‘விழித்திரு’ படத்திற்கு படத்தொகுப்பாளராக கே.எல். பிரவீன், கலை இயக்குநராக  எஸ்.எஸ். மூர்த்தி, ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

IMG_1782

டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம்.

அது மட்டுமின்றி… தமிழ் சினிமாவில் முதல் முறையாக  டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள்  இந்த ‘விழித்திரு’ படத்தில்  ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் இயக்குநரான மீரா கதிரவன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது.

meera kathiravan

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மீரா கதிரவன், “ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே பகல் நேர படப்பிடிப்பைவிட இரவு நேர படப்பிடிப்புக்குத்தான் நேரமும், காலமும் அதிகமாக தேவைப்படும். 100 நாட்கள் பகலில் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு நேரம் தேவைப்படுமோ, அதே நேரம்தான் நாங்கள் 10 நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்த தேவைப்பட்டது.

நிச்சயமாக எங்களின் இந்த கடின உழைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.

முத்துக்குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, அவரின் சவாலான காட்சிகளுக்கு டூப் எதுவும் போடாமல் நடித்திருக்கிறார்.  

‘விழித்திரு’ படத்தின் ஒரு காட்சியைக்கூட பார்க்காமல், என் மீதும் என் குழுவினரின் மீதும் முழு நம்பிக்கை வைத்து, இந்த படத்தை வாங்கிய விடியல் ராஜு சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்…” என்று உற்சாகமாக கூறினார் இயக்குநர் மீரா கதிரவன். 

‘விழித்திரு’ படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் வாங்கி வெளியிடுகிறார் பிரபல விநியோகஸ்தரான விடியல் ராஜு. 

IMG_1754

அவர் இந்தப் படம் பற்றி பேசுகையில், “இந்த நிமிடம்வரையிலும் ‘விழித்திரு’ படத்தின் கதை என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. நானும் உங்களை போலத்தான் டிரெயிலர்களையும், பாடல்களையும் மட்டுமே பார்த்தேன்.

நான் ஏற்கனவே இந்தப் படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த் மூலமாக, இந்த படத்தின் சிறப்பை பற்றி அறிந்தேன். அதனால்தான் இந்தப் படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்குள் வந்தது.

படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடித்திருக்கும் டி.ராஜேந்தரின் நடிப்பாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற ஒரு படமாகவும், வர்த்தக ரீதியாக வெற்றி  பெற கூடிய ஒரு திரைப்படமாகவும் எங்களின் ‘விழித்திரு’ இருக்கும்…” என்று ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் நம்பிக்கையுடன் கூறுகிறார் விடியல் ராஜு.

Our Score