நேற்று இரவு சத்யம் திரையரங்கில் வரும் மார்ச் 10-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் ‘மாநகரம்’ படத்தின் சிறப்பு பிரத்யேக காட்சி சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது.
இந்தச் சிறப்பு பிரத்யேக திரையிடலில் நடிகர்கள் ஸ்ரீ, செளந்தர்ராஜா, குரு சோமசுந்தரம், அசோக், வெங்கட், மணிகண்டன், உதயா அழகப்பன், விஜய் ஆதிராஜ், ஸ்ரீமன், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன், சி.வி.குமார், இயக்குநர்கள் பாலாஜி தரணிதரன், சுசீந்திரன், மிஷ்கின், அருண் வைத்தியநாதன், ரவிக்குமார், பா.ரஞ்சித், பாண்டிராஜ், கெளரவ், அஜயன்பாலா, விஜய் பாலாஜி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், பிரியன், நடிகை காயத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம் எதிர்பார்த்ததைவிடவும் மிகச் சிறப்பாக இருந்ததால் வந்திருந்த அனைவரும் படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களையும் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபுவையும் வெகுவாக பாராட்டினர்.