full screen background image

“கூச்சப்படாம என் இடுப்பைக் கிள்ளுங்க..” – விவேக்கிற்கு ஓகே சொன்ன சோனியா அகர்வால்..!

“கூச்சப்படாம என் இடுப்பைக் கிள்ளுங்க..” – விவேக்கிற்கு ஓகே சொன்ன சோனியா அகர்வால்..!

முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

palakkattu-madhavan-trailer

இந்த விழாவில் விவேக் பேசும்போது, “ஒரு காமெடியன்கூட ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குவார்கள். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள்; நடிக்க மாட்டார்கள். கதாநாயக நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டியெல்லாம் கொடுப்பார்கள். ஆனால் காமெடியே வாழ்க்கையாக உள்ள, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன்கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள்.

ஆனால் என் படத்தில் என்னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார். .அதற்காக  சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல அவருடன் நடிக்கும்போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன்.

ஆனால்  சோனியா அகர்வாலோ,  ‘கூச்சப்படாதீங்க ஸார்… நடிப்புதானே.. இனிமே இது உங்க ஏரியா.. தாராளமாக கிள்ளுங்க..’ என்றார். அப்புறம் என்ன..? அது போதாதா எனக்கு..? தமிழனுக்கு கோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன..? பிறகு நானும்  புகுந்து விளையாடி விட்டேன்..” என்றார்.

காமெடியன்னு பார்த்தா ஹீரோ மாதிரியே பேசுறாருப்பா அண்ணன்..!

Our Score