“விவேகம் படத்தின் கதை என்னுடையது…” – பிரபல தயாரிப்பாளர் கிளப்பும் பூதம்..!

“விவேகம் படத்தின் கதை என்னுடையது…” – பிரபல தயாரிப்பாளர் கிளப்பும் பூதம்..!

தற்போது திரைக்கு வந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விவேகம்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று புதிய அணுகுண்டை வீசியிருக்கிறார் பிரபல தமிழ்ச் சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர்.

‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களை தயாரித்த லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். தற்போது ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார்.

‘விவேகம்’ படத்தின் கதை தன்னுடையது என்று இப்போது சொல்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.

ravindhar chandrasekar-1

இது பற்றிய செய்தியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் ரவீந்தர் எழுதியிருக்கிறார். அதன்படி “தான் உருவாக்க நினைத்திருக்கும் ‘ஐ.நா.’ என்கிற படத்தின் கதைதான் ‘விவேகம்’ படத்தின் கதை…” என்கிறார்.

2013-ம் ஆண்டிலேயே இந்தக் கதையை எழுதி நடிகர் அஜீத்குமாருக்கு மிக நெருக்கமான உதவியாளரிடம் கொடுத்து அஜித்திடம் சொல்லும்படி சொல்லியிருந்தாராம். மூன்று வாரங்கள் நேரம் கேட்ட அந்த உதவியாளர் பின்பு வந்து புதிய இயக்குநரின் படத்தில் அஜித்குமார் நடிக்க மறுப்பதாகச் சொல்லிவிட்டாராம்.

இதனால் இதே கதையை வைத்து தான் அடுத்து ‘ஐ.நா.’ என்கிற தலைப்பில் படமாக தயாரிக்க உத்தேசித்திருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.

ஆனால் இப்போது ‘விவேகம்’ படத்தை பார்த்தபோது தனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததாகவும், ‘விவேகம்’ படத்தின் திரைக்கதையில் அறுபது சதவிகிதம் தான் எழுதிய திரைக்கதை என்றும் குமுறியிருக்கிறார்.

இதற்காக அஜீத்தையோ, படத்தின் இயக்குநர் சிவாவையோ குற்றம் சாட்டாத ரவீந்தர் சந்திரசேகரன்.. “அவர்களுக்கு இந்த கதை திருட்டு வேலையில் சம்பந்தம் இருக்காது. ஆனால் நான் அஜீத்தை நெருங்க முயற்சித்தபோது உதவி செய்ய வந்த அஜீத்தின் மிக நெருங்கிய உதவியாளர் மூலமாகத்தான் இந்தக் கதை திருடப்பட்டிருக்கும்…” என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

‘ஐ.நா.’ திரைப்படம் இந்த வருடம் துவங்கப்படுவதாக இருந்த நிலையில் கதை திருடப்பட்டதால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக சொல்லி வருத்தப்படுகிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.

இது தொடர்பாக ரவீந்தர் சந்திரசேகரன் முகநூலில் இன்று எழுதியுள்ளது இதுதான் :

Hieght of Betrayal: Dhrogam

Vivegam original content is my movie I – na.. It is designed 2013 and the story was narated to the close associate of Ajith kumar also submited a presentation . He took 3 weeks time to get an appointment but later he came back saying Ajith sir will not be doing with debut director so story narration is not possible.

When i watched the movie vivegam 60% of content be utilised with few screen play which was narrated by me. I strongly confirm and confess that it has nothing to deal with Director Siruthai siva sir nor Thala Ajith sir . Because i have not met them nor any communication has happen till now. So this story stolen was not via them only to Ajith Kumar associate who took me ride and made me in tears while watching movie vegam.

The intresting factor is begining of the movie there will be slide saying that all content where dream plot not realistic ..Insane, absolutely wrong i have done script long detailing and reasearch with real time incident with Tamil cinema commercial aspect for thala fan in this project I – na and pre production minimum time required is not less than 1.5 years.

This script was also narrated to major technicians who where upset calling me and asking regarding the creative stealing.

I admit now and agree tat pain of director and assistatnt director creative when it is stolen how hard and pain to digest. I salute you all people for still fighting with such risk in this industry. Being Producer done 3 movies for me when am facing such betrayal..How a common creative hunter will cry if his effort is stolen.

Now my confess or bringing this information to lime light is not for any cheap publicity or for any means of expectation.

A simple appologise to me not even in public but he shud understand being with Thala mistake cannot happen. Remember am so thala fan also this script much more designed and content driven for him.

I am not here to comment on vivegam quality . It is absolutely fabulous product from siva sir.

My project i- na shoot commencing on 2018 August as it needs own time on preproduction.

I appreciate if the person contact me asap and appologise before i go with evidential data to public ground. I respect the human Thala Ajith kumar so my conscious is not leting me public..other than pain which undergo also for future people shouldnt be hidden and cry saying who can question such issue.

If people who think what my view and concern is genuine . KINDLY Support me for justice. I am one among passionate like you not only a producer also a dream of venturing director.

NEVER EVER GIVE UP.

Our Score