கைப்பேசி செயலியில் இயங்கும் புதிய தொலைக்காட்சி VIU-வில் தமிழ் தொடர்கள்..!

கைப்பேசி செயலியில் இயங்கும் புதிய தொலைக்காட்சி VIU-வில் தமிழ் தொடர்கள்..!

PCCW மற்றும் Vuclip வழங்கும் முன்னணி OTT வீடியோ சேவையான Viu தனது சேவையை இந்தியாவிலும் விரிவுபடுத்தியிருக்கிறது. தமிழ் மொழியில் இன்று துவங்கப்படும் Viu சேவையில் உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் குறும்படங்கள், வலைத் தொடர்கள், கொரிய நாடகங்கள் ஆகியவை இருக்கின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் முன்னணி OTT வீடியோ சேவையான Viu, ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை Love lust confusion, Kaushiki, It happened in Hong Kong, Pilla and Peli gola 1, 2 மூலம் கவர்ந்துள்ளது.

நான்கு தமிழ்  ஒரிஜினல் சீரீஸ்களுடன், மணிகண்டன் மற்றும் வெங்கட் பிரபு மற்றும் பல  இயக்குநர்கள் இயக்கிய விருது பெற்ற குறும் படங்கள், கொரிய நாடகங்கள் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவரும் நோக்கத்தில் உள்ளது Viu. 

தமிழ் பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள பலரும் Viu உடன்  இணைந்துள்ளனர். 

  • தென்னிந்திய சினிமாவின் முன்னோடியும், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிகப் பெரிய விநியோகஸ்தர்களான AP இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ். 
  • திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர், சமீர் பாரத் ராம் மற்றும் சூப்பர் டாக்கீஸ்.
  • விஷன் டைம்ஸ் மற்றும் ட்ரெண்ட்லௌட்.
  • ‘திரு திரு துறு துறு’ படத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குனர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளி நந்தினி.
  • YouTube முன்னணி கண்டெண்ட் தயாரிப்பாளர்கள்  Black sheep மற்றும் Fully Filmy.

புதிய தமிழ் வலைத் தொடர்கள்:

கல்யாணமும் கடந்து போகும் :

viu-kalyaanamum kadanthu pogum-poster 

தயாரிப்பு - Viu, நலன் குமாரசாமி, சமீர் பரத் ராம் மற்றும் சதீஷ் சுவாமிநாதன்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பத்து சமகால திருமண கதைகளை இந்த தொடர் சொல்கிறது. இந்த பத்து கதைகள் வெவ்வேறு வயதுடைய கதாபாத்திரங்கள், பொருளாதார பின்னணிகள் மற்றும் இடங்களை கொண்டது. அவை அனைத்தும் சொந்த காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள விழையும் கதாபாத்திரங்களின் புள்ளியில் இணைகிறது. நையாண்டி அணுகுமுறை மூலம் சொல்லப்படும்  ஒவ்வொரு கதையும் திருமணம் என்ற விஷயத்தை பற்றி உங்களை யோசிக்க வைக்கும்.

மெட்ராஸ் மேன்சன் :

viu-madras mansion-poster-1

தயாரிப்பு: Viu & சூப்பர் டாக்கீஸ்

ராயப்பேட்டையின் ஒரு பழைய மேன்சன் பின்னணியில், பல்வேறு பகுதியிலிருந்து வந்த மக்கள் மற்றும் அவர்களின் மிகப்பெரிய கனவுகளை பற்றிய கதை. இந்த அசாதாரண சரணாலயத்தில் ஒரு ஆர்வமுள்ள இயக்குநர், ஒரு மீம் கிரியேட்டர், ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர், ரியல் எஸ்டேட் தரகர் மற்றும் பல கதாபாத்திரங்கள் உள்ளன.

Door No 403 :

viu-403-poster-1

தயாரிப்பு: Viu & Trendloud

முதல் படத்தில் வெற்றி பெறும் ஒரு நடிகர், அவருக்கு கேட்கப்படும் பத்து கேள்விகளை பற்றிய கதை. ஒவ்வொரு கேள்வியும் அவரது வெற்றிக்கு வழிவகுத்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி கூறுகிறது. Door No 403 ஒன்றாக வாழும் விசித்திரமான நண்பர்களின் தொகுப்பு மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்கள் உங்களை சிரிக்க வைக்கும்.

நிலா நிலா ஓடி வா : 

viu-nila nila odi va-poster

தயாரிப்பு: Viu & Make believe production

'திரு திரு துறு துறு' இயக்குநர் நந்தினி JS இயக்கியுள்ள, இந்த தொடரில், நடிகர் அஸ்வின் காகமானு, ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா யெல்லா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. இந்த அனைத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் காதலில் விழும் இந்த ஜோடியை பற்றிய, வாம்பயர் பின்னனியை கொண்ட ரொமாண்டிக் காமெடி தொடர்.

குறும் படங்கள் :

மாஷா அல்லா... கணேசா :

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த குறும் படம் மும்பையில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை பற்றி, முக்கியமான ஒரு திருப்பத்துடன் பேசுகிறது.

இந்துக்களுடன் பல ஆண்டுகளாக அமைதியாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் அவரது குழந்தைகள் திடீரென அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடப்பட்ட கலவரங்களில் சிக்குகிறார்கள். 

வன்முறையில் இருந்து தப்பிக்க, தங்களுக்கே தெரியாமல் அவர்கள் ஒரு இந்து கோவிலின் கருவறைக்குள் அடைக்கலமாகிறார்கள். மத மற்றும் இனவாத ஒற்றுமை பற்றிய வலுவான ஒரு செய்தியை இந்த குறும்படம் வெளிப்படுத்துகிறது.

The Wind :

கனடா நாட்டு தமிழ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்ற குறும் படமான 'The Wind' தேசிய விருது  பெற்ற இயக்குநரான மணிகண்டன் இயக்கியது.

தற்கொலை செய்துகொண்ட ஒரு நபரின் இறந்த உடலைப் பாதுகாக்கும் ஒரு போலீஸ்காரரின் வாழ்க்கையில் உள்ள ஒரு நாள் சித்தரிக்கப்படுகிறது. அரசு பணியாட்கள் வர காத்திருக்கும் நேரத்தில் அந்த காவலருக்கும்,  இறந்தவருக்கும் இடையே ஒரு வினோதமான தோழமை உருவாகிறது,

கடந்த கால மற்றும் தற்போதைய, வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு இடையிலான இடைவெளியை அது பிணைக்கிறது. விஜய் சேதுபதி நடித்த இந்த குறும்படம் Viu-வில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

Viu பற்றி :

Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 நாடுகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும்.

வளர்ந்து வரும் பிராந்திய மொழி உள்ளடக்கத்தால், இந்நிறுவனம் அதன் நூலகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

காமெடி,  ரொமாண்டிக் காமெடி, ட்ராமா வகை என வெவ்வேறு வகையிலான, பல்வேறு கதைகளை கொண்ட  நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது.

Viu App ஆண்ட்ராய்டு கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களிலும் கிடைக்கிறது. 

Vuclip பற்றி : 

Vuclip  இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆன் டிமாண்ட் சேவையை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில் நுட்ப மீடியா நிறுவனம். Vuclip நிறுவனம் Viu, Viu life, Vuclip Videos, Vuclip games ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டுள்ள Vuclip, சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, மும்பை, புனே, துபாய், ஜகார்த்தா ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. 

இதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும் படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

IMG_0216

முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், A.V.M.அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் ல‌ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் Vuclip President & COO அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது, "நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்கு பிறகும் அதே கலாச்சாரத்தை பார்க்க முடிந்தது.

இந்த தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம் வளரும் என்ற நம்பிக்கையில்தான் துவங்கப்பட்டது. துவக்கத்தில் நிறைய சவால்களை சந்தித்தோம். பைரஸிதான் இந்தத் துறையில் மிகப் பெரிய ஒரு பிரச்சினை. பைரஸியோடு போராட, புதிய விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுப்பது என முடிவெடுத்தோம்.

Mr.Arun Prakash COO of VIU

3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம். தென் கிழக்கு ஆசியாவில் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம்தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 ஒரிஜினல் நிகழ்ச்சிகளை தயாரிக்க இருக்கிறோம்" என்றார்.

Venkat Prabhu

‘மாஷா அல்லா கணேஷா’ என்ற குறும் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “குறும் படங்களை இயக்கிவிட்டு இயக்குநராவதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கிவிட்டு குறும் படத்தை இயக்கியிருக்கிறேன். ‘மாஷா அல்லா கணேஷா’ கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.

சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களை சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி…” என்றார்.

Mohan Raja

இயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், “வேறு எங்கு வெற்றி பெறுவதையும்விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம். 17 ஆண்டுகள் நான் இயக்குனராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குநராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. யாஸ்மின் அந்த குறையை தீர்த்திருக்கிறார், அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குநராக என்னிடமிருந்து வருவார்கள்.

நிறைய உதவி இயக்குநர்கள், வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தை பிரிந்து வந்து இங்கு கடுமையாக உழைத்து இன்று இயக்குநர் ஆகியிருக்கிறார்…” என்றார்.

IMG_0279

இயக்குநர் நந்தினி பேசும்போது, “தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும். இந்தக் கதையை எடுக்க வாய்ப்பு கொடுத்த, உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி…” என்றார்.

Parthiban

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசும்போது, “செம்ம ஃபீலு ப்ரோ’ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் நம்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா. இந்த Viuவின் COO ஒரு தமிழர். ‘ஆள போறான் தமிழன்’ என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது.

இந்தத் துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்…” என்றார்.

நடிகர்கள் நாசர், கயல் சந்திரன், சாந்தனு, சம்பத், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, அஸ்வின் காகமானு, நடிகைகள் பூஜா தேவரியா, குட்டி பத்மினி, காயத்ரி, ரூபா மஞ்சரி, கீ கீ விஜய் தயாரிப்பாளர்கள் ரகுநாதன், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எஸ் ஆர் பிரபு, சமீர் பரத் ராம், இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், பிரவீன் காந்தி, ஸ்ரீகணேஷ், எடிட்டர் பிரவீன் கே.எல். ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Viu-வின் சேவைகளை www.viu.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். Viu-வின் வழக்கமான அறிவிப்புகளை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஃஇன்ஸ்டாகிராமில் பெறலாம்.