full screen background image

விஜய் ஆண்டனி-அர்ஜுன்  கூட்டணியில்  வளர்ந்து வரும் ‘கொலைகாரன்’

விஜய் ஆண்டனி-அர்ஜுன்  கூட்டணியில்  வளர்ந்து வரும் ‘கொலைகாரன்’

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது  நடிகர்  அர்ஜூனுடன் இணைந்து  ‘கொலைக்காரன்’  என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் – ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பு நிறுவனம் – தியா மூவிஸ், தயாரிப்பாளர் – பி.பிரதீப், ஒளிப்பதிவு – மியூக்ஸ், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், மக்கள் தொடர்பு – நிகில், புகைப்படம் – ஆர்.எஸ்.ராஜா, நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – ஹினா, டப்பிங் பொறியாளர் – சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – கே.சக்திவேல், விளம்பர வடிவமைப்பு – ஓ.கே.விஜய், தயாரிப்பு நிர்வாகி – ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், டிஸைன்ஸ் – Gibsonuga, கிராபிக் டிஸைன்ஸ் – Hues media design. நிர்வாகத் தயாரிப்பாளர் – சாண்ட்ரா ஜான்ஸன், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ஜனார்த்தனன், இணை தயாரிப்பு – சுந்தர காமராஜ்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட  காட்சிகள்  படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன.  அடுத்தக் கட்ட  படப்பிடிப்பிற்கான  ஆயுத்த  வேலைகளில் படக் குழுவினர் இறங்கியுள்ளனர்.

 

Our Score