தியேட்டர்களில் மட்டுமல்லாமது தொலைக்காட்சிகளிலும் விஜய்-அஜீத் படங்கள்தான் நம்பர் ஒன் போட்டியில் மல்லாடுகின்றன.
கடந்த தமிழ்ப் புத்தாண்டு வாரத்தில் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையிட்டதன் மூலமாக சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதோடு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியியையும் பின்னுக்குத் தள்ளியது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சியாக இருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சிம்புவை சிறப்பு விருந்தினராக வரவழைத்திருந்தும், ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது.
அதோடு அந்த வாரத்திய சீரியல்களின் வரிசையிலும் சன் தொலைக்காட்சி முதல் 4 இடங்களைப் பிடித்துக் கொள்ள ‘பாரதி கண்ணம்மா’ தொடர் மூலமாக ஸ்டார் விஜய் 5-ல் ஒரு இடத்தைத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது.
‘மாஸ்டரை’ வைத்து ‘குக் வித் கோமாளி’யை கீழே தள்ளினாலும் அஜீத்தின் ‘விஸ்வாச’த்தை ‘மாஸ்டர்’ படம் நெருங்க முடியாமல் போய்விட்டதை எண்ணி அஜீத் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
‘மாஸ்டரு’க்குக் கிடைத்த டி.ஆர்.பி. 17.10. மேலும் 1375546 பார்வைகளும் உலக அளவில் கிடைத்துள்ளது.
ஆனால், ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலக அளவில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரையிலும் யாரும் முறியடிக்க முடியாத சாதனையாக 18143000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதனால் இந்த டி.ஆர்.பி. விவகாரம்… விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் கொடுத்திருக்கிறது..!