விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ 2022 ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ 2022 ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்.’

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, R.N.R.மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, K.S.G.வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரித்துள்ளார். து.ப. சரவணன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.்ரீகாந்த் படத் தொகுப்பு செய்திருக்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்துள்ளார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் மூவரும் சண்டை இயக்கம் செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்  சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

வரும் 2022 ஜனவரி 26, குடியரசுத் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறார்கள்.

Our Score