19 திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

19 திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம்  என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு ‘கிராண்மா’ என்கிற படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குநர் S.S.ஷிஜின்லால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்.தக் ‘கிராண்மா’ படத்தின் கதையிலும், காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட நடிகை சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் – அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சண்டை இயக்கம் – முகேஷ் ராஜா.

 சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் மீது படக்குழு வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்களான சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா, சூர்யா ஜே., மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா, மரினா மைக்கேல், கோகுல் சுரேஷ், சரத் அப்பானி, ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரை பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் படத்தைப் பல மடங்கு மேலே கொண்டு சென்றுவிட்டார்கள்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி பற்றித் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறும்போது, “இந்த நிகழ்வு படத்தைப் பல மடங்கு வெளிச்சத்துக்குக்  கொண்டு சென்றுள்ளது. படத்தின் ஆடியோ, டிரைலர் ஆகியவை விரைவில் வெளியாக இருக்கின்றன. இந்தப் படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில்  அறிவிக்க இருக்கிறோம்…” என்றார்.

படத்தின் இயக்குநரான ஷிஜின்லால் எஸ்.எஸ்.  பேசும்போது, “முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில்  வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரியதொரு வெற்றியாகவே நான் உணர்கிறேன்.

இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். படத்தில் பணியாற்றிய  நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி…” என்றார்.

திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது.

Our Score