பழைய படங்களின் பெயர்களில் புதிய படங்களின் வரவுகள் வருவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
இதில் அடுத்த வரவு ‘பாயும்புலி’. சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ராதா ஜோடியாக நடிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில் 1983-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.
இப்போது இந்தப் படத்தின் தலைப்பை தனது அடுத்தப் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
இந்தப் புதிய ‘பாயும்புலி’ படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது விஷால். இவருக்கு ஜோடி காஜல் அகர்வால். முதலில் லட்சுமிமேனன்தான் இதிலும் நடிப்பதாக இருந்த்து. ஆனால் தன்னுடைய பிளஸ்டூ படிப்பை மனதில் வைத்து லட்சுமி மேனன் இதில் நடிக்க மறுத்துவிட்டதால் வாய்ப்பு காஜலுக்கு போய்விட்டதாம்.
‘பாண்டிய நாடு’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் இணையும் படம் இது என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது.
விஷால், ஏற்கெனவே ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற ரஜினி படத்தின் தலைப்பை வைத்து வெற்றி கண்டிருப்பதால், இந்த டைட்டில் பார்முலாவை பின்பற்றியிருப்பது போல தெரிகிறது.