A.R.முருகதாஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கிறார்

A.R.முருகதாஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கிறார்

நடிகர் விஷால் தற்போது ‘எனிமி’ என்ற படத்தில் ஆர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘துப்பறிவாளன்-2’ திரைப்படத்திற்கு வெளிநாட்டு லொகேஷன் தேவை என்பதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யின் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து வெளியேறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சோனி நிறுவனத்துடன் இணைந்து ஐந்து புதிய  படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.

இந்த ஐந்து படங்களில் ஒன்றுதான் விஷால் நடிக்கவிருக்கும் படம். இந்தப் படத்தை ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கவிருக்கிறாராம்.

மற்றைய படங்களை இயக்கும் இயக்குநர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

Our Score