full screen background image

“சங்கத்திலிருந்து தன்னை நீக்கினால் தகுந்த காரணம் சொல்ல வேண்டும்…” – நடிகர் விஷால் பேட்டி..!

“சங்கத்திலிருந்து தன்னை நீக்கினால் தகுந்த காரணம் சொல்ல வேண்டும்…” – நடிகர் விஷால் பேட்டி..!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கினால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கோரியுள்ளார்.

நேற்று கோவையில் பேட்டியளித்த அவர், தான் முன்பு சொன்ன குற்றச்சாட்டுக்களுக்கு இ்ன்னமும் பதில் வரவில்லையென்றும், “நடிகர்களை தரக்குறைவாகப் பேசிய ராதாரவியையும், காளையையும் சங்கத்தில் இருந்து நீக்கியே ஆக வேண்டும்” என்றும் மீண்டும் கூறினார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு வருகிற 30–ம் தேதி சென்னையில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நடிகர் விஷால் பிரச்சினை எழுப்பப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே விஷாலும், நாசரும் அளித்த புகாரின் அடிப்படையில் ராதாரவிக்கும், காளைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவிதிருந்தார். 

அதற்கான விளக்கத்தை ராதாரவியும், காளையும் கூட்டத்தில் முன் வைப்பார்களென்று தெரிகிறது. மேலும் நடிகர் சங்கம் பற்றி  விஷால் வெளியிடங்களில் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் இந்தச் செயற்குழுவுக்கு அழைக்கப்படாததால் அவருக்கு வெறுமனே நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்படும் என தெரிகிறது..

Our Score