நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தை விஷாலே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலமாகத் தயாரிக்கிறான். இது விஷால் தயாரிக்கும் 7-வது படமாகும்.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். படத் தொகுப்பு – ரூபன், கலை – உமேஷ்.
படத்தில் இடம் பெறும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் ஆக்ஷன் கலந்த டெக்னிக்கல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதாம்.
[Not a valid template]
Our Score









