full screen background image

நிஜ ஹீரோவான விஷால்..!

நிஜ ஹீரோவான விஷால்..!

திருட்டு விசிடிக்கு எதிராக சினிமாக்காரர்கள் மட்டுமே அவ்வப்போது பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார்கள். வாங்குகின்ற கமிஷன் லட்சத்தில் இருப்பதால் காவல்துறையினர் கடமைக்கு மாதத்துக்கு ஒரு வழக்கு போட்டு தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக சீன் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் ஒரு புதுப்படம் வெளிவந்த 3 நாட்களில் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் லோக்கல் சேனல்களில் இரவு நேரத்தில் புதிய படம் ரிலீஸாகிவிடும். தியேட்டர்கள் காத்தாடிக் கொண்டிருக்க.. இங்கே வீட்டுக்கு வீடு முழித்திருந்து பார்க்கிறது ரசிகர் கூட்டம்..! தடுக்க முடியாத இந்தச் சூழலிலும் எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

இயக்குநர் ஹரியின் பூஜை படத்திற்காக காரைக்குடியில் டெண்ட் அடித்திருக்கும் நடிகர் விஷால் தற்செயலாக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் டிவி பார்க்கும்போது அதில் உன் சமையலறையில் என்ற படமும், வடகறி என்ற படமும் ஓடியதைப் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார்.

உடனேயே லோக்கல் போலீஸாருக்கு தகவல் சொல்லி அவர்களுடன் அந்த கேபிள் டிவி அலுவலகத்திற்கு ஓடியிருக்கிறார். அங்கேயிருந்து கேபிள் டிவிக்காரர்களை லோக்கல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.

முடிவு எப்படி என்று நாளை தெரியவரும்.. லோக்கல் போலீஸுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது சினிமாவில் போலீஸ்காரராகவே நடித்திருக்கும் விஷாலுக்குத் தெரியாததல்ல.. ஆனால் ஒரு எதிர்ப்புணர்வை காட்ட வேண்டும் என்று நினைத்து செய்த இந்தச் செயலுக்காக அவருக்கு ஒரு சல்யூட்..!

இதேபோல் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைவிட அதிகக் கட்டணத்தை அடாவடியாக வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளர்களையும் நேருக்கு நேர் கேள்வி கேட்டால் இன்னும் அதிகம் பாராட்டப்படுவார் என்கிறார்கள் கேபிள் டிவியில் புதுப் படம் பார்க்க விரும்பும் அப்பாவி பொதுமக்கள்..!

விஷால் போலீஸ் ஸ்டேஷனில் வாதம் செய்யும் காட்சியின் வீடியோ பதிவு இங்கே :

நன்றி : நாளைய சினிமா

Our Score