லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பி.செந்தில் முருகன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘விருத்தாசலம்.’
இந்தப் படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராய நத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தபோது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் விருது பெற்றவர்.
கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் சம்பத் ராம், ‘பாவா’ லட்சுமணன், ‘காதல்’ சரவணன், ‘வெண்ணிலா கபடி குழு’ ஜானகி, ‘மதுபானக் கடை’ ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா, இயக்குநர் நாராயணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சிவநேசன் / உமாசங்கர், இசை – ஸ்ரீராம், பாடல்கள் – இளைய கம்பன், படத் தொகுப்பு – வி.டி.விஜயன் – சுனில், கலை – நா.கருப்பையன், நடனம் – சதீஷ் சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – கே.எஸ்.மயில்வாகணன். தயாரிப்பு நிர்வாகம் – முருகதாஸ், தயாரிப்பு – பி.செந்தில் முருகன். எழுத்து, இயக்கம் – ரத்தன் கணபதி.
படம் பற்றி இயக்குநர் ரத்தன் கணபதி பேசும்போது, “கதாநாயகன் விருதகிரி சிறு வயதில் தான் அறியாமல் செய்த குற்றத்திற்காக. 14 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். சிறையிலிருந்து வெளியே வரும் அவன் இளமையை இழந்து பெற்ற தாயையும் இழந்து காதலியையும் இழக்க நேரிடுகிறது.
ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்கவில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை…! கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் ரத்தன் கணபதி.