full screen background image

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என  மூன்று மொழிகளில் தயாராகும் ‘பொட்டு’

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என  மூன்று மொழிகளில் தயாராகும் ‘பொட்டு’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு.’

இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் தம்பி ராமையா, பரணி,  நான் கடவுள் ராஜேந்திரன்,  ஊர்வசி,  நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே,  மன்சூரலிகான்,  ஆர்யன், சாமிநாதன்,  பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை   –  அம்ரீஷ்,  பாடல்கள்   – விவேகா, கருணாகரன், சொற்கோ, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – எலீசா, கலை – நித்யானந்த், நடனம் – ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர், தயாரிப்பு – ஜான் மேக்ஸ், ஜோன்ஸ்,  வசனம் – செந்தில், எழுத்து, இயக்கம்  -வி.சி.வடிவுடையான்.

படம் பற்றி இயக்குநர் வடிவுடையான் பேசும்போது, “இது பக்கவான திரில்லர் படமாக இருக்கும். மொத்தம் 90 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதா இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

தமிழில்  ‘பொட்டு’ என்றும், தெலுங்கில்  ‘பொட்டூ’ என்றும், ஹிந்தியில்  ‘பிந்தி’ என்றும் மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில்   இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான ‘அடி போடி சண்டாளி’ பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொட்டு..”  என்றார் இயக்குநர் வடிவுடையான்.

Our Score