24 மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காமெடிதான் இந்த ‘விந்தை’..!

24 மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காமெடிதான் இந்த ‘விந்தை’..!

‘காதல்  2014’ படத்தை தயாரித்து வெளியிட்ட ‘அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம்’ இப்போது புதிதாக ‘விந்தை’ என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர். R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இதில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘கம்பீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ‘நண்பர்கள் கவனத்திற்கு’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.  மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர் மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, கவுதமி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –    ரத்தீஷ்கண்ணா

இசை    –   வில்லியம்ஸ்

பாடல்கள்    –  பாரதி, பொன்முத்துவேல்

கலை   –  பத்து

எடிட்டிங்    –   நதி புயல்

நடனம்   –  தினா

தயாரிப்பு மேற்பார்வை  –  கார்த்திக் ரெட்டி

நிர்வாக தயாரிப்பு   –  பொன்ராஜ்

இணை தயாரிப்பு   –  R.Y.ஆல்வின், R.Y.கெவின்

தயாரிப்பு   –  R.L.யேசுதாஸ்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்  –  லாரா.   இவர் ஏற்கெனவே ‘வர்மம்’ என்ற படத்தை இயக்கியவர்.

இயக்குநர் லாரா படம் பற்றி சொன்னபோது, “இளம் காதலர்களான மகேந்திரன்  –  மனிஷாஜித் இருவரும் சென்னைக்கு ஓடி வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் போலீஸ் அவர்களை கைது செய்கிறார்கள். 24 மணி நேரம் காவல் நிலையத்தில் இருக்கும் அவர்கள் அங்கே சந்திக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், திகில் கலந்தும் முழுக்க முழுக்க காமெடி படமாகவும் உருவாக்கி வருகிறோம். இதற்காக சென்னையில் காவல் நிலைய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில்தான் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மிகக் குறுகிய கால தயாரிப்பாக இந்த ‘விந்தை’ படம் உருவாகியுள்ளது..” என்றார்.

Our Score