நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் இணைந்து தயாரிக்கும் படம் ‘சவாலே சமாளி’.
இந்தப் படத்தில் ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ வெற்றிப் படங்களில் நடித்த அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, பரவை முனியம்மா, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.செல்வகுமார்., DFT
இசை – எஸ்.எஸ்.தமன்
பாடல்கள் – சினேகன்
கலை – தேவா
நடனம் – தினா
ஸ்டண்ட் – ‘மிராக்கில்’ மைக்கேல்
எடிட்டிங் – S.அகமது
இணை தயரிப்பு – கீர்த்தி பாண்டியன்.
தயாரிப்பு – கவிதாபாண்டியன், S.N. ராஜராஜன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா. இவர் ஏற்கெனவே “கழுகு “ படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் சத்யசிவா கூறும்போது… “நடிகர் திலகம் சிவாஜிகணேசன்-ஜெயலலிதா நடித்து மாபெரும் வெற்றி படம் ‘சவாலே சமாளி.’ அந்தத் தலைப்பு எங்களுடைய கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயரையே முறைப்படி அனுமதி பெற்று வைத்திருக்கிறோம்.
எனது முந்தைய படமான ‘கழுகு’, படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம். படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் இந்த ‘சவாலே சமாளி’. இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படவுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது…” என்றார்.