“2 குழந்தைகள் இருந்தால் நோ டைவர்ஸ்” – ‘வில்லங்கம்’ படம் சொல்லும் நீதி

“2 குழந்தைகள் இருந்தால் நோ டைவர்ஸ்” – ‘வில்லங்கம்’ படம் சொல்லும் நீதி

2 குழந்தைகள் பிறந்துவிட்டால், அந்தத் தம்பதிக்கு விவாகரத்து வழங்கக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘வில்லங்கம்’.

இதில் நந்தா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சோனியா அகர்வால், மகேஸ்வரி, பேபி ஜனனி, பேபி ரோஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மாதவ்ராஜ், இசை – பரத்வாஜ், பாடல்கள் – சினேகன், கார்த்திக், இறையன்பு, படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடனம் – ஜான் பிரிட்டோ, கூல் ஜெயந்த், தயாரிப்பு ரா.நா.சரவணன், சுமதி அண்ணாமலை, இயக்கம் ரா.நா.சரவணன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் சரவணன், “நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தினால்கூட அதற்கு ஒரு தண்டனை தருகிற சட்டமும், சமூகமும்.. குடும்பத்திற்குள் இருந்து கொண்டே தவறு செய்யும் பெண்களை கண்டு கொள்வதில்லை.

ஒரு ஆண் செய்கிற தவறுக்கு உடனடியாக தண்டனை தர துடிக்கிற இந்தச் சமூகம், அவளே ஒரு பெண் என்றால் பரிதாபத்தோடு பார்க்கிறது. இந்த ஒருதலைப்பட்சமான பார்வை தவறானது.

எல்லா தவறுகளையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்..” என்றார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக முதலில் மீனாட்சிதான் நடித்திருக்கிறார். சில நாட்கள் நடித்துவிட்டு மும்பைக்குச் சென்றவர் திரும்பி வரவேயில்லையாம்.. அவரைத் தொடர்பு கொள்ளவே முடியாத சூழலில்.. இப்போது ஹீரோயினை மாற்றியிருக்கிறார்கள். டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி இப்போது ஹீரோயினாக நடிக்கிறாராம்.

Our Score