ஆர்யா படத்தின் தலைப்பு ‘தனிக்காட்டு ராஜா’வா அல்லது ‘கடம்பனா’..?

ஆர்யா படத்தின் தலைப்பு ‘தனிக்காட்டு ராஜா’வா அல்லது ‘கடம்பனா’..?

ஆர்யா நடித்துவரும் புதிய படத்திற்கு ‘கடம்பன்’ என்று பெயர் வைக்கலாம் என்று தெரிகிறது.

சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் புதிய படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். இந்தப் படம் காடு சம்பந்தமான கதையை மையமாகக் கொண்டது. ‘மஞ்சப் பை’ படத்தை இயக்கிய இயக்குநர் ராகவன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு முதலில் ‘தனிக்காட்டு ராஜா’ என்று பெயர் வைத்திருப்பதாகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் இப்போது ஆர்யாவின் கேரக்டர் பெயரான ‘கடம்பன்’ என்ற பெயரையே படத்திற்கும் வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். விரைவில் தீர்மானமாகச் சொல்ல இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையையும், வனப்பையும் வெகுவாக கூட்டியிருக்கிறார். இதற்காக பல நாட்கள் ஜிம்மிலேயே பழியாய் கிடந்து பயிற்சியெடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாவது ஷெட்யூஸ் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திட்டமிடப் போகிறார்கள்.

Our Score