full screen background image

படிப்பது கடமை; சாதிப்பதுதான் பெருமை – மாணவர்களுக்கு ஜெயம் ரவியின் அட்வைஸ்..!

படிப்பது கடமை; சாதிப்பதுதான் பெருமை – மாணவர்களுக்கு ஜெயம் ரவியின் அட்வைஸ்..!

‘வில் அம்பு’ திரைப்படத்தின்  சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து  வரும் ‘இன்ஜினியா’ கலை விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்றது.

IMG_5609

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள்  சுசீந்திரன், ‘தாய்’ சரவணன், இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், படத்தின் நாயகர்கள் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், நாயகி சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி.

முதலாவதாக படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சுசீந்திரன் தங்கள் படக் குழுவை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் படக் குழுவினர் எல்லோரும் ஒவ்வொருவராக பேசினர்.

IMG_5614

படத்தின் நாயகர்களுள் ஒருவரான ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிதாக கருதுகிறேன். இதே லயோலா கல்லூரியில் மாணவனாக சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருந்தது. இந்தக் கல்லூரியில் சேர எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன்.. ஆனால் இடம் கிடைக்கவில்லை. ஆனால் அதே கல்லூரியில் நான் நடித்திருக்கும் படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடுவதில் எனக்கு பெரிதும் மகிழ்ச்சி…” என்றார்.

IMG_5793

நடிகர் ஸ்ரீ பேசும்போது, “எனக்கு எப்போதும் வித்தியாசமான கதைகளில்தான் நடிக்க பிடிக்கும். இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரம் முற்றிலும் புதுமையானது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் அது பிடிக்கும்..” என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் பேசும்போது, “என் பதினான்கு வருட நண்பன் சுசீந்திரன் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி…” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி ‘வில் அம்பு’  படத்துக்காக  இசையமைப்பாளர் நவீன் இசையில் இசையமைப்பாளர் டி.இமான் பாடியுள்ள சிங்கள் டிராக் பாடலான ‘நீயும் அடி நானும்’ பாடலை வெளியிட்டு பேசினார்.

IMG_5802

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் மாணவனாக படித்துள்ளேன். இதே பெட்ரம் ஹாலில் நிறைய நிகழ்ச்சியில் நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். இப்போது நான் உங்கள் சீனியராக இங்கே நிற்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களிடம் நிறைய பேசலாம் என்றுதான் வந்தேன். ஆனால் உங்கள் ஆரவாரத்தை பார்த்தவுடன் எனக்கு என்ன பேச வந்தோம் என்றே மறந்துவிட்டது.  

உங்களை போல் இங்கே அமர்ந்து நானும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன். நாம் கல்லூரிக்கு வந்து படிப்பில் சாதனை படைப்பது பெரிய விஷயமல்ல படிப்பது நம்முடைய கடமை. அதையும் தாண்டி நாம் என்ன சாதித்தோம் என்பதில்தான் நமக்கு பெருமையே இருக்கிறது.

இயக்குநர் சுசீந்திரனின் மேல் உள்ள மரியாதையின் காரணமாகத்தான், நான் இந்த விழாவுக்கு வந்தேன். இயக்குநர் சுசீந்திரனை போல் நட்புக்கு பெரிய மரியாதை கொடுப்பவன் நான்.

இந்தப் படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுசீந்திரனின் நெருங்கிய நண்பர். இருவரும் பதினான்கு வருடங்களாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். அந்த நட்பை மறக்காமல் இயக்குநர் சுசீந்திரன் தன்  நண்பனுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார். இதை போன்ற நட்பை நீங்கள் அனைவரும் கல்லூரி காலத்தில் தவறவிட்டுவிடக் கூடாது.

இந்தப் படத்தில் நடித்துள்ள ஸ்ரீயின் நடிப்பை ‘ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ படத்தில் நான் நிறைய ரசித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். படத்துக்கு இசையமைத்துள்ள நவீன் மெட்டுக்களை அருமையாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களை புகழ் பெற்ற இசையமைப்பாளர்களை கொண்டு உருவாக்கியுள்ளார் நவீன். இதுவொரு நல்ல முயற்சி. இது போன்ற முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெரும்…” என்று வாழ்த்தினார் நடிகர் ஜெயம் ரவி. 

Our Score