பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’

பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’

ரேயான் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.கீதா கிருஷ்ணசாமி அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘என்னோடு விளையாடு’.

இதில் நாயகர்களாக பரத் மற்றும் கதிர் நடிக்கிறார்கள். பரத்தின் காதலியாக சாந்தினி, கதிரின் காதலியாக சஞ்சிதாஷெட்டி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, யோக் ஜே.பி மற்றும் 'கமலா தியேட்டர்' கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவராஜ், எடிட்டிங் – கோபி கிருஷ்ணா, இசை – மோசஸ், பாடல்கள்   –        நா.முத்துக்குமார், விவேகா, சாரதி, கதிர்மொழி, நடனம் – விஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  அருண் கிருஷ்ணசாமி, தயாரிப்பு   –  கே.கீதா கிருஷ்ணசாமி.

இந்த படத்தில் இரு நாயகர்கள். அவர்களில் ஒருவன் ஒவ்வொரு நொடியும் ஜாலியாய் பொழுதை கழிக்க சூதாட்டத்தில் ஈடுபடுகிறான். மற்றொருவன் பிடித்தமான வேலை அதற்கேற்ற சம்பளம்  என சந்தோஷமாக வாழ்கிறான்.

இப்படி முரண்பட்ட வாழ்கையின் பாதையில் பயணிக்கும் இரு நாயகர்களும் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும் அளவிற்கு எதிர்பாராத பெரும் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  அந்த பிரச்னையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த ‘என்னோடு விளையாடு’ படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.