‘தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இறுதி சுற்று’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் Y NOT ஸ்டுடியோஸ் தற்போது புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் R.மாதவன், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ எனும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் R.மாதவன், விஜய் சேதுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ‘யு டர்ன்’ புகழ் ஷரதா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – P.S.வினோத், இசை – சாம் C.S, வசனம் – மணிகண்டன், பாடல்கள் – முத்தமிழ், நடனம் – கல்யாண், படத்தொகுப்பு – ரிச்சர்ட் கெவின், கலை இயக்குனர் – வினோத் ராஜ்குமார், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாக தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம், எழுத்து இயக்கம் – புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பு – சசிகாந்த் YNOT ஸ்டுடியோஸ்,
இப்படத்தை உலகமெங்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக R.ரவீந்திரன் வெளியிடுகிறார்.
முழுக்க, முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.