full screen background image

கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ பட படப்பிடிப்பு துவங்கியது

கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ பட படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

முதலில் ‘இந்தியன்-2′ படம் துவங்குமா.. ‘விக்ரம்’ துவங்குமா என்று தமிழ்த் திரையுலகத்தில் பட்டிமன்றம் நடந்து வந்த நேரத்தில் விக்ரம் படத்தைத் துணிந்து துவக்கிவிட்டார் கமல்ஹாசன்.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

இன்று காலை துவங்கிய இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.

Our Score