full screen background image

விக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..!

விக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..!

இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரரான இர்பான் பதான், ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விக்ரம் நடிக்கும் அவருடைய 58-வது திரைப்படத்தில்தான் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்போது ‘சீயான் விக்ரம்-58’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கவுள்ளார்.

எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச் சரியாக சித்தரிக்கும் ஆற்றல் பெற்ற நடிகர் விக்ரம் இப்படத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான்  உடன் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குநரான அஜய் ஞானமுத்து, பல சுவாரசியமான கதாபாத்திரங்களைக் உருவாக்கிய  பெருமையைப் பெற்றவர்.

ஏற்கனவே 2020-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக திகழும் இந்த ‘சீயான் விக்ரம்-58’ திரைப்படம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் வருகையின் செய்திக்கு பின் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ‘சீயான் விக்ரம்-58’ திரைப்படம் பல வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக் குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Our Score