அப்பாவுக்கு சிம்ரன்-மகனுக்கு வாணி போஜன் – சூப்பர் செலக்சன்

அப்பாவுக்கு சிம்ரன்-மகனுக்கு வாணி போஜன் – சூப்பர் செலக்சன்

சீயான் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் தினம் ஒரு பிரபலம் இணைந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தில் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் இணைந்தார். விக்ரமும், சிம்ரனும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் இணைகிறார்கள்.

ஏற்கெனவே இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அனிருத் திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட.. அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் சந்தோஷமாக இந்தப் படத்தில் இணைந்தார்.

தற்போது புதிய செய்தியாக வாணி போஜனும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். வாணி போஜன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வாணி போஜன் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, தாழ் திறவா’ மற்றும் ‘2டி நிறுவனம்’ தயாரிக்கும் ஒரு திரைப்படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score