full screen background image

“விஜயகாந்த் மிகச் சிறந்த மனிதர்” – நடிகை ராதா பாராட்டு..!

“விஜயகாந்த் மிகச் சிறந்த மனிதர்” – நடிகை ராதா பாராட்டு..!

நடிகை ராதா ‘கேப்டன்’ விஜயகாந்தை “மிகச் சிறந்த மனிதர்” என்று பாராட்டியுள்ளார்.

‘கேப்டன்’ விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும்போது நடிகை ராதா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ராதா தனது வாழ்த்துச் செய்தியில், “தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் விஜயகாந்த்..!

ஒரு சிறந்த கிராமத்து அழகான மனிதர். அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் நல்ல இதயம் கொண்டவர்..! அவருடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே எனக்கும், அவருக்குமே ஒரு குறிப்பிடத்தக்க அனுபவம். உண்மையில் அவர் உள்ளத்தளவில் நல்ல மனிதர்..! அவர் நல்ல உடல் நலன் பெறவும், சந்தோஷமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் ராதா.

நடிகை ராதாவும், விஜயகாந்தும் ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘உழவன் மகன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘மீனாட்சி திருவிளையாடல்’, ‘மனக்கணக்கு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

 
Our Score