நடிகர் விஜய் சமீப காலமாக தன்னுடைய படங்களில் சமயம் கிடைத்தால் தானே ஒரு பாடலை பாடியும் வருகிறார்.
அந்த வரிசையில் அட்லீ இயக்கத்தில் தற்போது தான் நடித்து வரும் பெயரிடப்படாத 59-வது படத்திலும் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.
‘செல்லக்குட்டி’ என்ற துவங்கும் இந்தப் பாடல் டூயட் பாடலாம். படத்தில் இந்தப் பாடலுக்கு விஜய்யும், சமந்தாவும் நடனமாடியுள்ளார்கள்.
ஏறகனவே ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘தலைவா’ படத்தில் விஜய் பாடிய “வாங்கண்ணா… வணக்கங்கண்ணா” என்ற பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் சூப்பட் ஹிட்டானது.
இது விஜய் பாடும் 31-வது பாடலாம். இந்த பாடலுக்கான படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டதாம்.
இந்த பாடல் பதிவாக்கத்தின் போது படக் குழுவினருடன் விஜய் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இப்போதுதான் வெளியிட்டிருக்கிறார்கள்.
Our Score










