“அனுஷ்கா என் வளர்ப்பு மகள்..” – நடிகர் நாசரின் பாசமான பேச்சு..!

“அனுஷ்கா என் வளர்ப்பு மகள்..” – நடிகர் நாசரின் பாசமான பேச்சு..!

நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் அனுஷ்காவை தன்னுடைய வளர்ப்பு மகள் என்று தெரிவித்தார்.

IMG_0081

நாசர் பேச வரும்போது கூடியிருந்த ரசிகர்கள் "தலைவர் வாழ்க" என்று கோஷமிட்டனர்.

தன் பேச்சின் துவக்கத்திலேயே இதனைக் குறிப்பிட்டு பேசிய நடிகர் நாசர், "தலைவர், வாழ்க கோஷமெல்லாம் இனிமேல் எங்களுக்குத் தேவையில்லை. சங்கத்தில் நிறைய வேலைகள் எங்களுக்காகக் காத்திருக்கின்றன.

நான் ஒரு நடிகர் என்ற முறையிலோ அல்லது நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலோ இந்த விழாவுக்கு வரவில்லை. என் மகள் அனுஷ்காவுக்காக விழாவில் கலந்து கொண்டேன். அனுஷ்காவை என்னுடைய வளர்ப்பு மகளாக நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

இந்தப் படத்தில், என் மகள் அனுஷ்கா மிக வித்தியாசமாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கப் போவது பற்றி அனுஷ்கா என்னிடம் பேசினார். அப்போது நான் அதற்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் 'மேக்கப்மேனை ஹாலிவுட்டில் இருந்து வரழைக்கவா..? கமல் ஸாரிடம் சொன்னால் உடனே ஏற்பாடு செய்வார்' என்றேன். அதற்கு 'நான் அப்படி குண்டா இருக்குற மாதிரியான மேக்கப்பெல்லாம் போட்டு நடிக்கப் போறதில்லை. நிஜமாகவே சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகப் போறேன்..' என்றார். இதுதான் அனுஷ்கா.

இந்தப் படத்துக்காக அனுஷ்கா ரொம்பப் பிரயத்தனப்பட்டு தன்னை குண்டு பெண்ணாக மாற்றிக் கொண்டார். கதாபாத்திரத்துக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்வது சுலபமல்ல. கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த டெடிகேஷன்தான் அனுஷ்காவின் இப்போதைய புகழுக்குக் காரணம்..” என்றார்.