full screen background image

விஜய் சேதுபதியின் 4 படங்கள் அடுத்த மாதம் வெளியாகின்றன

விஜய் சேதுபதியின் 4 படங்கள் அடுத்த மாதம் வெளியாகின்றன

வரும் செப்டம்பர் மாதம் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான மாதமாக அமையப் போகிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் நான்கு திரைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளன. இந்த நான்கில் 1 படம் மட்டுமே நேரடியாக தியேட்டரில் வெளியாகவுள்ளது என்பதுதான் இதில்  இருக்கும் சோகம்.

விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கடுத்த நாள் செப்டம்பர் 10-ம் தேதியன்று ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. அன்றே அத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதியன்று விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படமான ‘அனபெல் சேதுபதி’ டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

செப்டம்பர் 24-ம் தேதியன்று ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘கடைசி விவசாயி’ படமும் சோனி லிவ் ஓடிடி சேனலில் வெளியாகவுள்ளது.

இப்படி நான்கு படங்களுமே ஒரே மாதத்தில் வெளியாவது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இதுபோல் இதற்கு முன்பாக எந்தத் தமிழ் நடிகருக்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதுதான் உண்மை.

கடைசியாக கிடைத்தத் தகவலின்படி ‘கடைசி விவசாயி’ படம் மட்டும் ஓடிடியில் வெளியாவது தள்ளிப் போகலாம் அல்லது தியேட்டருக்கே வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘லாபம்’ படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இத்திரைப்படம் திரைக்கு வருவது முடிவு செய்யப்படுமாம்.

Our Score