ஹிந்தி படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?

ஹிந்தி படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?

சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் ‘மிமி.’ இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மிமி’ படமே ஏற்கெனவே மராத்தி மொழியில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘Mala Aai Vaihhaachi’ என்கிற படத்தின் ரீமேக்குதான். அப்பொழுதே இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றிருந்தது.

இந்த மராத்தி படத்தை  2013-ம் ஆண்டு இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் தெலுங்கில் ‘வெல்கம் ஒபாமா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

தற்போது மீண்டும் ஹிந்தியில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் இயக்குநருமான லக்ஷ்மன் உடேகர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில், கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சனோன் நடித்திருந்தார்.

காதல், ரொமான்டிக், மற்றும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்துள்ள இவர் இந்த படத்தில், மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்த்திருந்தார். 

தற்போதைய இந்திய் சூழலில் ஒரு வாடகைத் தாய் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. ஹோட்டலில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும் கீர்த்தி சனோன் எப்படி ஒரு வாடகை தாயாக மாற சம்மதிக்கிறார்..? அதற்கான சென்டிமெண்ட்டான காரணங்கள் என்று அனைவரையும் கவரும்வகையில்தான் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் அமைந்துள்ளது.

தற்போது இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இரண்டு மொழிகளிலும் நாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்தில் நடித்தால் நிச்சயமாக அவர் பேசப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

Our Score